ருசியான சியா புட்டிங்…

0
929
chiya seeds healthy pudding

(chiya seeds healthy pudding)

சியா விதைகள் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.  வெறும்  சுவைக்காக  மட்டுமின்றி அதில் இருந்து கிடைக்கும் அளவற்ற பயன்களினால்…  என்பதே உண்மை.

தேவையான பொருட்கள் :

4 டீஸ்பூன் சியா விதைகள்

250 மி.லி அல்மாண்ட் பால்,தேங்காய்ப் பால் (அ) ஓட் பால்

தேன் (அ) இனிப்புத் துளசி

புதிய அல்லது பதப்படுத்தப்பட்ட பழங்கள்

இலவங்கப் பட்டை

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் தேங்காய் பாலுடன் சியா விதைகளை கலக்கவும்.  இவை  இரண்டும் நன்றாக சேரும் வரை 2-5 நிமிடங்கள் கலக்கவும்.  பிறகு  இனிப்புத்துளசியாக  இருந்தால் 2 டீஸ்பூனும் அல்லது தேன் சேர்த்தால் 1 ½ டீஸ்பூனும் சேர்க்கவும்.

இரவு முழுவதும் அல்லது 4 மணி நேரத்திற்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதிக கெட்டித் தன்மை அடைவதற்குள் எடுத்து அதன் மேல் உங்களுக்குப் பிடித்த பழங்களை வெட்டி வைத்தால் சியா புடிங் தயார்.

இது  குழந்தைகள்  மிகவும்  விரும்பி சாப்பிடுவார்கள். சுவையுடன் கலந்த ஆரோக்கியம் தரும் சியா புட்டிங் பெரியவர்களுக்கும் பிடிக்கும்.

சியா விதைகளில் பலருக்கும் தெரியாத அழகின் ரகசியங்கள்  ஒளிந்திருக்கிறது. இது, சால்மன் மீனை விட இந்த சியா விதையில் 8 மடங்கு ஒமேகா-3 அமிலம் அதிகமாக உள்ளது.

பாலை விட 6 மடங்கு அதிகமாக  கால்சியமும், கீரையை விட 3 மடங்கு  அதிகளவு இரும்புச்சத்தும் உள்ளது. அதேபோல், வாழைப்பழத்தை விட 15 மடங்கு மெக்னீசியமும், ப்ளாக்ஸை விட 2 மடங்கு நார்ச்சத்தும், கிட்னி பீன்ஸ்களை விட 6 மடங்கு புரதமும், அவலை விட 4 மடங்கு செலினியமும் நிறைந்துள்ளது.

tags:-chiya seeds healthy pudding
<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

மக்களின் காணிகளை விடுவிக்க பணம் கேட்கும் படையினர் – டீ.எம்.சுவாமிநாதன்