நிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா

0
707
china moon dark side space satellite latest nasa queqiao programme

(china moon dark side space satellite latest nasa queqiao programme)
பூமியின் ஒரே துணைக்கோளாக நிலவு இருக்கிறது. இருப்பினும் இதன் மறுபக்கம் பூமியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை. பூமியைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் ஒன்றாக இருப்பதே இதற்குக் காரணம்.

இந்நிலையில், மர்மமான நிலவின் மறுபக்கம் பற்றி ஆராய்வதற்காக சீனா பிரத்யேகமான செயற்கை கோள் ஒன்றை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

அந்த செயற்கைக் கோளுக்கு ‘கியுகியொ’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை மார்ச் 4C என்ற ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தியிருக்கிறது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சாங் செய்மதி ஏவு தளத்திலிருந்து திங்கட்கிழமை அதிகாலை 5.28 மணிக்கு கியுகியொ விண்ணில் பாய்ந்துள்ளது.

இந்த செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலவின் மறுபக்கம் பற்றிய தகவல்களை பதிவுசெய்தால் அது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமையும்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

china moon dark side space satellite latest nasa queqiao programme