காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கு: பீகார் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சிபிஐ சோதனை

0
377
CBI conducted raid ministers houses connection rape 34 girls camp

பீகாரில் காப்பகத்தில் தங்கியிருந்த 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. CBI conducted raid ministers houses connection rape 34 girls camp 

பீகார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள தொண்டு நிறுவனம் சார்பில் காப்பகம் நடத்தப்பட்டு வந்தது. இதில், ஆதரவற்ற சிறுமிகள் பலர் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்களில் 34 பேர் முக்கிய பிரமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காப்பகத்தை நடத்தி வந்த பிரஜேஷ் தாகூரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தாகூரின் மனைவி கூறுகையில், `‘பீகார் மாநில சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. சந்தேஷ்வர் அடிக்கடி காப்பகத்துக்கு வந்து சென்றார்’ என குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், பிரஜேஷ் தாகூரின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் அமைச்சரின் கணவருடன் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 17 முறை தொடர்பு கொண்டு பேசியிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மா கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து பீகார் அரசு இந்த வழக்கை சிபிஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. காப்பக ஊழியர்கள், அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. CBI conducted raid ministers houses connection rape 34 girls camp 

இந்நிலையில், மஞ்சு வர்மாவுக்கு சொந்தமான பாட்னாவில் உள்ள 3 வீடுகள், மோதிகாரி, பகல்பூரில் உள்ள வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites