சிலை கடத்தல் வழக்குகள்; சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை

0
504
CBCID Officials will inquire idol smuggling High official

குறைந்தளவிலான பொலிஸார் இருப்பதனால் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க இயலாது என சி.பி.ஐ மறுத்துவிட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை செய்வார்கள் என்றும் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். (CBCID Officials will inquire idol smuggling High official)

சிலை கடத்தல் வழக்குகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இதுவரை விசாரித்து வந்த நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் இவர் இந்த துறைக்கு நியமிக்கப்பட்டதால் அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவியது.

ஆனாலும், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தனக்கு ஒதுக்கிய குறைந்தளவு பொலிஸாரை வைத்துக் கொண்டு பல்வேறு திருட்டு சிலைகளை கண்டுபிடித்தார்.

சிலை திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக அற நிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் இதில் சிக்கியிருந்தனர்.

அதிகளவிலான சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளதால் ‘இன்டர்போல்’ பொலிஸ் உதவியை நாடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி, இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரணை செய்யுமாறு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்ட போதிலும் இதனை ஏற்க சி.பி.ஐ. மறுத்துவிட்டது.

சி.பி.ஐ.யில் அதிகளவிலான வழக்குகள் உள்ளதாகவும் சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்ய போதிய பொலிஸார் இல்லை என்பதால் தங்களால் விசாரணை செய்ய இயலாது என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

தேவைப்பட்டால் சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு கடித போக்குவரத்து சம்பந்தமாக உதவுவதாகவும், இன்டர்போல் பொலிஸாரிடம் கேட்டு பெற வேண்டிய தகவல்களை பெற்று தருவதாகவும் சி.பி.ஐ. கூறியுள்ளது.

வழக்குகளை முழுமையாக எடுத்து விசாரணை செய்ய இயலாது என்று சி.பி.ஐ கூறி இருப்பது குறித்து உயர் பொலிஸ் அதிகாரியிடம் கேட்டதற்கு,

சிலை கடத்தல் வழக்குகள் தமிழக சி.பி.சி.ஐ.டி பொலிஸாரால் திறமையாகத்தான் விசாரிக்கப்பட்டு வந்தது. தமிழக பொலிஸார் திறமையானவர்கள் தான்.

ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இந்த வழக்குகளை விசாரித்து வந்தாலும் அவர் ஓய்வு பெற்ற பின்னர் வேறொரு அதிகாரி தான் இந்த வழக்குகளை விசாரிப்பார்.

எனவே வழக்கு விசாரணையில் எந்த தொய்வும் ஏற்படாது. பொன் மாணிக்கவேல் போல் எத்தனையோ திறமையான அதிகாரிகள் தமிழக பொலிஸ் துறையில் உள்ளனர்.

இருந்தாலும் சி.பி.ஐயிடம் இருந்து தமிழக அரசுக்கு இன்னும் முறையாக கடிதம் வந்து சேரவில்லை. நீதிமன்றத்தில் தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; CBCID Officials will inquire idol smuggling High official