‘ஐஸ்வர்யாவுக்கு நிகர் ஐஸ்வர்யாவே!’ 17ஆவது முறையாக கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் உலாவந்த ஐஸ்

0
2104

(Cannes Festival Red Carpet Aishwarya Walk Stunning)

பிரான்சில் 2018-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அவர் அணிந்துவந்த ஆடை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் பேச்சு.

இது ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளும் 17-வது கேன்ஸ் திரைப்பட விழா. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பட்டாம்பூச்சிகள் வரிசைப்படுத்தப்பட்ட மெர்மெய்ட் கவுனில் மிகவும் அழகாகத் தோன்றினார்.

அதிலும், சிவப்புக்கம்பளத்தை அலங்கரித்தவாறு ஐஸ்வர்யா நடந்து வந்த தோரணை அனைவரது கண்களையும் பிரமிக்கச் செய்தது.

இந்நிலையில், ஐஸ்வர்யா திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் உடல் எடை கூடி கேன்ஸ் இல் கலந்து கொண்டிருந்த போது அவரின் உடல் அழகு, உடை, அவர் பூசியிருந்த உதட்டுச்சாயம் என அனைவரது கிண்டலுக்கும் ஆளாகியிருந்தார்.

ஆனால், இந்த ஆண்டு விழாவில் தன் மீது எழுந்த விமர்சனங்களை மறக்கச்செய்தது மட்டுமல்லாமல், `ஐஸ்வர்யாவுக்கு நிகர் ஐஸ்வர்யாதான்’ என சொல்லும்படி செய்துவிட்டார். மீண்டும் ஒருமுறை சிவப்புக்கம்பளத்தில் பவனி வரமாட்டாரா என ஏங்க வைத்துவிட்டார்.

Tag: Cannes Festival Red Carpet Aishwarya Walk Stunning