பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கனேடிய நகரம் வழங்கியுள்ள கௌரவம்

0
24

கனடாவின் வான்கூவர் நகரம், பிரபல ஹாலிவுட் நடிகரான ரயன் ரெய்னால்ட்ஸுக்கு உயரிய கௌரவம் ஒன்றை வழங்கியுள்ளது. டெட்பூல் முதலான பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரயன் ரெய்னால்ட்ஸ். 

இந்நிலையில், அவருக்கு Freedom of the City என்னும் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது வான்கூவர் நகரம். பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும், உணவு வங்கிகளுக்கும் வாரி வழங்கும் ரயன், தனது சமுதாயத்துக்கு உதவும் குணம் கொண்டவர் என அவரை புகழ்ந்துள்ளது வான்கூவர் நகரம். 

விருதை ஏற்றுக்கொண்ட ரயன், வான்கூவர்தான் என்னை உருவாக்கியது, அதை நான் எங்கு சென்றாலும் என்னுடன் கொண்டு செல்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் வான்கூவரின் வரலாற்றில் தான் இப்போது ஒரு அங்கமாகியுள்ளது தன்னை பெருமையடையச் செய்துள்ளதாகவும், தன்னை அங்கீகரித்த நகரத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் ரயன்.