அனுமதியின்றி தாயின் பூதவுடலை தகனம் செய்ததாக கனடிய பிரஜை வழக்கு

0
117

தனது அனுமதியின்றி தாயின் பூதவுடலை தகனம் செய்ததாக கனடாவின் மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அமெரிக்காவின் இறுதிக் கிரியை சேவையை வழங்கும் நிறுவனமொன்றுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜேன் பிலிப் என்ற பெண் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.

தாயின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டுமென எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் தகனம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனது தாயின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை என குறித்த நபர் வழக்கில் தெரிவித்துள்ளார்.