ஜேர்மனியில் நடைபெறும் G7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் சட்டையில்லாமல் புடின் வெளியிட்டுள்ள புகைப்படங்களை வெளிப்படையாக கேலி செய்துள்ளார்கள்.
தனது ஜாக்கெட்டைக் கழற்றியபடி பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘நாம் புடினை விட வலிமையானவர்கள் என்பதைக் காட்டவேண்டும் என்று கூற ஆமாம், நாமும் சட்டை போடாமல் நெஞ்சைக் காட்டியபடி குதிரை சவாரி செய்து நமது சிக்ஸ் பேக்கைக் காட்டவேண்டியதுதான் என ட்ரூடோ கேலி பேசியதாக கூறப்படுகின்றது.
குதிரை ஏற்றம், மீன் பிடிப்பது, கரடி வேட்டையாடுவது என வரிசையாக புதின் சட்டையில்லாமல் எடுத்த புகைப்படங்கள் பல ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில் புடின்னின் புகைப்படங்கள் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கேலி கிண்டல்களுக்கு ஆளாகிவருவது குறிப்பிடத்தக்கது.
