ஞானசார தேரர் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு விசாரணைக்கு சட்ட மா அதிபரோ, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளோ வருகை தருவது அவசியமற்றது. மஜிஸ்ட்ரேட் நீதிபதியின் விருப்பத்தின் பேரில் தீர்ப்பு வழங்கப்படலாம் என முன்னாள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.(Buddhist monk galagoda aththe gnanasara)
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சிறைத் தண்டனை அனுபவிக்கும் ஏனைய 15 பிக்குகளுடன் ஞானசார தேரரை ஒப்பிடுவது அநீதியானது.
சிறையிலுள்ள ஏனைய 15 பிக்குகளுக்கும் ஆதரவாக எந்தவொரு மேன் முறையீட்டு மனுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
ஆனால், ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு மனு முன்வைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு மனு முன்வைக்கப்பட்ட ஒருவருக்கு சிறையில் தனது காவியுடையை கலையத் தேவையில்லை.
அத்துடன், சிறையிலுள்ள 15 பேருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட வில்லை.
ஞானசார தேரர் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு விசாரணைக்கு சட்ட மா அதிபரோ, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளோ வருகை தருவது அவசியமற்றது.
மஜிஸ்ட்ரேட் நீதிபதியின் விருப்பத்தின் பேரில் தீர்ப்பு வழங்கப்படலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
tags :- Buddhist monk galagoda aththe gnanasara
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- விமல் வீரவன்சவுக்கு புலி வேண்டும் – தென்பகுதி மக்களை ஏமாற்றவும் வேண்டும்
- கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது
- அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்