சகோதரனின் மரணம் மகிழ்ச்சி அளிக்கிறது: காரணத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்

0
448
Brother death brings happiness British woman released

பிரான்சில் தவறுதலாக வேட்டை துப்பாக்கிக்கு பலியான பிரித்தானியர் சொந்த சகோதரிக்கே பாலியல் தொல்லை அளித்தவர் என்ற பகீர் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Brother death brings happiness British woman released

குறித்த நபர் தொடர்பில் அவரது சகோதரி வெளியிட்டுள்ள தகவலில், அவனது மரணம் வெகு சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இப்போது தான் தமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள அந்த வேட்டைக்காரர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரான்சில் கடந்த சனிக்கிழமை Les Gets பகுதியில் மிதிவண்டி சவாரியில் ஈடுபட்டிருந்தபோது, காட்டு விலங்கு என கருதி இளைஞர் ஒருவரால் 34 வயது Mark Sutton என்ற பிரித்தானியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தால் கடும் அதிர்ச்சிக்குள்ளான அந்த 22 வயது இளைஞர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சையில் உள்ளார். மட்டுமின்றி கொலை சம்பவம் தொடர்பில் பொலிசாரும் அந்த இளைஞரை விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, கொல்லப்பட்ட மார்க் சட்டனின் 32 வயது சகோதரி Katie Toghill தமக்கு நேர்ந்த துயரங்களை பட்டியலிட்டுள்ளார்.

சிறு வயதில் தம்மை 100 முறையாவது தாக்கி தமது சகோதரர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியிருப்பார் என கூறிய அவர், ஒரு கட்டத்தில் தமது தாயாருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்தே பிரித்தானியாவை விட்டு அவர் வெளியேறினார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருவகையில் தமது சகோதரரின் மரணம் தமக்கு மனமகிழ்ச்சியை அளிப்பதாக கூறும் அவர், இனிமேல் தமது சகோதரரால் தம்மை காயப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

tags ;- Brother death brings happiness British woman released

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************