Brampton நகர முதல்வர் Patrick Brown-னுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழர் சமூகத்திற்கான அவரது ஆதரவுக்கும் இந்த அச்சுறுத்தலுக்கும் தொடர்பில்லை என Peel பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர் நகர முதல்வர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவரது மனைவி, மகன் ஆகியோரும் இந்த மிரட்டலில் குறிப்பிடப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இந்த விடயம் குறித்து செவ்வாய்க்கிழமை (15) செய்தியாளர்கள் முன் வைத்த கேள்வியை Peel பிராந்திய பொலிஸ் துணைத் தலைவரிடம் முன்வைக்குமாறு Patrick Brown கோரினார்.
குறிப்பிட்ட அச்சுறுத்தல் கனடாவிற்குள் இருந்து வந்ததை Peel பிராந்திய பொலிஸ் துணைத் தலைவர் Nick Milinovich உறுதிப்படுத்தினார். நகர முதல்வருக்கும் அவரது இல்லத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு இரண்டு வாரங்கள் நீடித்ததாகவும் தமது விசாரணையின் “வெற்றி” காரணமாக குறிப்பிட்ட பாதுகாப்பு மீள பெறப்பட்டதாகவும் Nick Milinovich தெரிவித்தார். விரைவில் இந்த சம்பவம் குறித்து மேலதிக விவரங்களை பகிர்ந்து கொள்ள அவர் உறுதியளித்தார்.