BJP terrorism Kashmir Jitendra Singh government compromise
பயங்கரவாதம் மற்றும் காஷ்மீர் விஷயத்தில் பா.ஜ.க. அரசு எந்தவித சமரசமும் செய்துகொள்ளாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஜம்முவில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பயங்கரவாதம் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் பேசியதாவது:-
காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. வரவிருக்கும் நாட்களில் அது தவறு என உணர்ந்துகொள்வீர்கள். பயங்கரவாதமும், நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதலும் கவலைக்குரியது. காஷ்மீர் விஷயத்திலும், பயங்கரவாத விஷயத்திலும் அரசு எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளாது.
எல்லையில் நிரந்தரமாக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை நீட்டிப்பு செய்வது குறித்து பாதுகாப்பு நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் உள்துறை அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
BJP terrorism Kashmir Jitendra Singh government compromise
More Tamil News
- தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை தெரிவிக்க 3 மாத அவகாசம் கோரி மத்திய அரசு மனு!
- நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு தான் தோல்வி : டிடிவி தினகரன்!
- பத்திரிகையாளர் கொலை..! குற்றவாளிகளின் படத்தை வெளியிட்ட காவல்துறை!
- ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை மனு நிராகரிப்பு!
- தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை : தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு!
- `அ.தி.மு.க ஆட்சியை மோடி பத்திரமாக காப்பாற்றி வருகிறார்’ – ஆ.ராசா காட்டம்!
Tamil News Group websites :