மாணவி சோபியா ‘பாஸிச பாஜக ஒழிக’ என்ற ஒரே ஒரு கோஷம் போட்டதால் இன்று உலகளவில் டிரெண்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆரம்பிக்கப்பட்ட வாதத்தை தாண்டி பாஜக மீதுள்ள கோபத்தை இதன் மூலம் நெட்டிசன்கள் திட்டி தீர்த்துவிட்டனர். Bigg boss Gayathri slams Sophia gossip
இந்நிலையில் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கிருந்த கொஞ்சம் பெயரையும், புகழையும் இழந்த காயத்ரி, ‘சோபியாவுக்கும், சோபியாவுக்கு ஆதரவு கொடுத்தவர்களையும் வறுத்தெடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பில் “ஒரு படித்த பெண் விமானத்தில் இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை. ஒரே நாளில் பரபரப்பை ஏற்படுத்தி புகழடைய வேண்டும் என்பதே இந்த சோபியாவின் விருப்பமாக இருந்திருக்கலாம். அதனால் திட்டம் போட்டு ஒரு அரசியல் தலைவரை குறி வைத்துள்ளார்.
இதுபோன்ற சம்பவம் அமெரிக்கா, துபாய் மற்றும் கனடா போன்ற நாடுகளில் விமானத்தில் நடந்தால் அதற்கான தண்டனையே வேறு, சோபியாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்’ என்று ஆவேசமாக காயத்ரி கூறியுள்ளார்.
ஏற்கனவே இருந்த பெயர் காணாதெண்டு இப்போது புதிதாக கருத்து தெரிவித்து மாட்டிவிட்டார். சும்மா விடுவார்களா நெட்டிசன்கள்???