நேற்றைய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியலின் போது ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. Bigg boss 2 Aishwarya fight Vijayalakshmi
நேற்றைய தினம் பிக்பாஸில் விக்ரம் வேதா பாணியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள், தங்களுக்கான விளக்கத்தைக் கொடுத்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று புதிய முறை அமுல்படுத்தப்பட்டது.
இதில், ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகிய இருவருக்கும் இடையில் கடும் சண்டை ஏற்பட்டது. தமிழகத்தில் உண்மையாக இருந்தால், எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும், தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை. அவர்களுக்கு பிடித்துவிட்டால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்று விஜயலட்சுமி உண்மையைத்தான் கூறினார். இதனை ஐஸ்வர்யா, தவறாக புரிந்து கொண்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.