வெங்கட் பிரபுவின் ‘சென்னை – 28’ படத்தில் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள். ‘சென்னை – 28’ படத்தை தொடர்ந்து நரேனின் ‘அஞ்சாதே’, கிருஷ்ணாவின் ‘கற்றது களவு’, கார்த்தியின் ‘பிரியாணி’ போன்ற படங்களில் நடித்தார். Big Boss Celebrity Acts Chimbudevan movie
இவர் ‘பிக் பாஸ்’ சீசன் 2-வில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பங்கேற்றார். தற்போது, ‘பிக் பாஸ்’ சீசன் 2 முடிந்த பிறகு விஜயலட்சுமி ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பிரபல இயக்குநர் சிம்புதேவன் இயக்குகிறாராம். இப்படத்தை வெங்கட் பிரபு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ மூலம் தயாரித்து வருகிறார். வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Big Boss Celebrity Acts Chimbudevan movie, Big Boss Celebrity Acts Chimbudevan, Big Boss Celebrity, Big Boss Celebrity Acts, Chimbudevan movie, Tamil Cinema News, Latest Tamil Cinema News