வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு; தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு

0
587
Bengal around Tamil Nadu Kerala likely rain

அந்தமான் மற்றும் வங்கக்கடலில் எதிர்வரும் 23 ஆம் திகதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (Bengal around Tamil Nadu Kerala likely rain)

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் விட்டு விட்டு மழை பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை ஒக்டோபர் 20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதற்கான சாதகமான சூழ்நிலை உள்ளது.

அதன்பின்னர் வட கிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்காக சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது.

ஒக்டோபர் 23 ஆம் திகதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தமிழகம், கேரளா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்யும் என்றும் மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யலாம் என்றும் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Bengal around Tamil Nadu Kerala likely rain