ஏர்வாடிக் கடற்கரையில் பீடி இலைகள் மீட்பு

0
222

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் தமிழகம் ஏர்வாடிக் கடற்கரைக்கு எடுத்து வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ பீடி இலைகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் படகில் ஏற்றுவதற்காக ஒரு லொறியில் பீடி இலைகள் கடற்கரைக்கு எடுத்து வந்த சமயம் பொலிஸாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர்.

இதன்போது லொறியைப் பரிசோதனை செய்த தமிழகப் பொலிஸார், அதில் இருந்து ஒவ்வொன்றும் 30 கிலோ எடையுடைய 70 பொதிகளை மீட்டனர்.