(Bear Attack Fisherman injured hospital admit)
திருகோணமலை, குச்சவெளி பகுதியில் இருந்து, சுமார் 7 வயதான நோய் வாய்ப்பட்ட கரடியொன்றைப் பிடித்து சிகிச்சையளிப்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் கிரிதலை வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு கடந்த 15 ஆம் திகதி கொண்டு சென்றனர்.
கடந்த 20 ஆம் திகதி இரவு குறித்த கரடி அதனை அடைத்து வைத்திருந்த கூட்டை உடைத்து, தப்பியோடியதாக கிரிதலை வனவிலங்கு கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர் கலிங்கு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்தக் கரடி குறித்த பகுதியில் வசிக்கும் மக்களை தாக்குவதற்கு முற்படுவதாக வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் தெரிவித்ததை அடுத்து, இதனைப் பிடிப்பதற்காக வனவிலங்கு அதிகாரிகள் பகல் இரவாக தேடியுள்ளனர்.
இதன்பின்னர் கடந்த 24 ஆம் திகதி காலை குறித்த கரடி மீனவர்கள் இருவரை தாக்கியுள்ளது.
இதனையறிந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்ற போது, குறித்த கரடி மீனவர் ஒருவரைத் தாக்கிக் கொண்டிருந்துள்ளது.
இந்த மீனவரை காப்பாற்றுவதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள் குறித்த கரடியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்தனர்.
கரடி தாக்கியதில் காயமடைந்த 44 வயதான மீனவர் பொலன்நறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தக் கரடியின் தாக்குதலில் இருந்து மக்கள் உயிர்தப்பியது அதிசயம் என்றும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- ஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Bear Attack Fisherman injured hospital admit