நேற்று இரவு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 16 வயதான பாடசாலை மாணவியொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். Batticaloa 16 Years Girl Student Found Dead Body Tamil News
மட்டக்களப்பு பகுதியில் சிறுமிகள் தங்கும் விடுதியிலிருந்து தனியார் வகுப்புக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பாடசாலை மாணவி ஒருவரே வேறு கிராமத்து வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் நாவற்கேணி – மயில்வாகனம் வீதியில் வசிக்கும் செல்வேந்திரன் நிரோனிகா எனும் 10ம் தரத்தில் கற்கும் மாணவி ஆவார்.
இவர் நேற்று பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு விடுதியை விட்டு சென்ற நிலையில் வேறொரு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- கிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி!