பிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்!

17
2810
Australia PM consider macron's speech

பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அவுஸ்திரேலிய விஜயத்தின் போது அவுஸ்திரேலிய பிரதமரின் மனைவியை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதனை அவுஸ்திரேலிய பிரதமர் கணக்கெடுக்கவில்லை.Australia PM consider macron’s speech

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அவுஸ்திரேலியாக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் ஒன்றை கடந்த இரு நாட்களுக்கு முன் மேற்கொண்டார். இந்நிலையில், மக்ரோன் மற்றும் அவரது மனைவிக்கு அந்நாட்டு பிரதமர் விருந்து கொடுத்தார். அதன் பின்னர், இரு தலைவர்களும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அச்சமயம் அவுஸ்திரேலிய பிரதமரை பார்த்து “இந்த சிறப்பான விருந்துக்கு உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அத்துடன், உங்களது ருசியான மனைவிக்கும் நன்றி” என அவர் கூறினார்.

இதில் கூறப்பட்ட ருசியான மனைவி என்ற வார்த்தை கடும் சர்ச்சைக்கு உள்ளானது. மீடியாக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்கள் இடம் பெற்றன.

இது தொடர்பாக டர்ன்புல் விளக்கமளித்துள்ளார். அதில், “மக்ரோனின் கருத்தை புகழ்ச்சியாகவே எனது மனைவி எடுத்துக்கொண்டார். அவர் தவறாக எதுவும் பேசவில்லை.” என அவர் கூறியுள்ளார்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here