இலங்கை மத்திய வங்கி திறைசேறி முறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு, சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் தூதரகத்தின் ஊடாக அடைக்கலம் வழங்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Arjuna Mahendran Central Bank Bond Issue Tamil News
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகருக்கான காலம் முடிவடைந்துள்ள சந்தர்ப்பத்தில், அவர் நாட்டுக்கு மீண்டும் திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளை செய்தோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் அவர், தனது பதவி காலத்தை அதிகரித்துக்கொண்டு ஆளுநருக்கு உதவி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் ஊடாக ஆளுநருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதில் உண்மையில்லை என்றால், இக்கூற்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளிக்க வேண்டுமெனவும் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- எதிர்ப்பு பேரணியினால் அரசாங்கம் பதற்றமடைந்துள்ளது; நாமல்
- நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; பிரதமர்
- கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் கைது
- இன்று அதிகாலையில் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்
- ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்
- தந்தை மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது
- வட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்