(Arjun Rampal Mehr separation reason Sussanne)
நடிகர் அர்ஜுன் ராம்பலும், அவரின் மனைவியும் பிரிந்ததற்குக் காரணம், நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியுடனான தொடர்பால் தான் கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலும், அவரது மனைவி மெஹர் ஜெசியாவும் திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து தற்போது பிரிந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் இந்த முடிவுக்கு காரணம் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் என்று கூறப்படுகிறது.
அதாவது, கடந்த 2011ம் ஆண்டிலேயே ராம்பல், மெஹர் இடையே பிரச்சனை ஏற்படத் துவங்கியதாம். கடந்த 2011ம் ஆண்டில் ஷாருக்கானின் ”ரா ஒன்” படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து தூதுவிட்டார் அர்ஜுன் ராம்பல்.
ஆனால் இணை தயாரிப்பாளரான ஷாருக்கானிடம் தனது கணவருக்கு கூடுதல் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று பிரச்சனை செய்தார் மெஹர். இதையடுத்து ஷாருக்கான் அர்ஜுன் ராம்பலை ஒதுக்கி வைத்தார். இதனால், ஷாருக்கானின் மனைவி கௌரி தனது தோழியான மெஹருடன் பேசுவதை நிறுத்தினார்.
ஷாருக்கானை அடுத்து பிரபல இயக்குனர் கரண் ஜோஹாருக்கும், அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து பாலிவுட்டின் பெரிய ஆட்கள் ராம்பலை ஒதுக்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் தான் அவர் சூசனிடம் நெருக்கமானார்.
சூசனும், அர்ஜுன் ராம்பலும் மிகவும் நெருக்கமானது மெஹர் ஜெசியாவுக்கு கலக்கத்தை கொடுத்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.
பிரபலம் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் சூசனுக்கும், மெஹருக்கும் இடையே வாய்ச்சண்டை முற்றி இருவரும் திட்டித் தீர்த்துள்ளனர். இதையடுத்து மெஹர் அழுது கொண்டே அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
பிரச்சனை பெரிதான பிறகு சூசனை பார்க்க மாட்டேன் என்று அர்ஜுன் மெஹரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக சூசனை சந்தித்து பேசி வந்துள்ளாராம். இதை கண்டுபிடித்த மெஹர் கடும் கோபம் அடைந்துள்ளார்.
சூசன், ராம்பல் ரகசிய சந்திப்புகளால் மெஹர் தனது கணவர் மீது கோபப்பட்டுள்ளார். இருவரும் சத்தமாக சண்டை போட்டு வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து ஒருவர் மீது மற்றொருவர் வீசியுள்ளனர்.
இந்தச் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அடக்கி வாசிக்காவிட்டால் போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
<MOST RELATED CINEMA NEWS>>
* இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!
* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!
* ஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..!
* தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!
* சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..!
* அருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!
* மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..!
* எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..!
Tags :-Arjun Rampal Mehr separation reason Sussanne
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-