ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “2.0” படம் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். AR Rahman share 20 Climax scene tamil news
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-
ரஜினியின் “2.0”, விஜய்யின் “சர்கார்”, சிவகார்த்திகேயன் நடிக்கும் ”ஏலியன்” படம், மணிரத்னத்தின் “செக்கச்சிவந்த வானம்” என தமிழிலேயே நிறையப் படங்களில் பிசியாக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அத்துடன், பாலிவுட், ஹாலிவுட் படங்கள், இசை நிகழ்ச்சிகள் என தீவிரமாக இயங்கி வருகிறார். மேலும், அவருடைய கதை தயாரிப்பில் உருவாகும் “99 சாங்க்ஸ்” படத்தின் வெளியீட்டு வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் அளித்த ஒரு பேட்டியில்.. :-
”சங்கரின் 2.0 பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரகுமான், ’2.0’ போன்ற படத்தை ஷங்கரால் மட்டும்தான் உருவாக்க முடியும். அவர் விரும்பும் தரத்திற்கு வரும் வரை மிக மெனக்கெட்டு வருகிறார்.
படத்தில் ஒரு பாடலைப் பார்த்தேன். எந்த கிராபிக்சும் இல்லாமலேயே அவ்வளவு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. முக்கியமாகப் படத்தின் மொத்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்த்தேன். எனக்கு அதன் வியப்பு இன்னமும் நீங்கவில்லை. ஷங்கர் போன்ற திறமைசாலி இந்தியாவுக்கே பெருமை” என்று பதிலளித்தார்.
ரஜினிகாந்துடன், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் “2.0” படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது.
மேலும், 3டி தொழில்நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் போன்ற பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
tags :- AR Rahman share 20 Climax scene tamil news
<<MOST RELATED CINEMA NEWS>>
* இன்று மாலை சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த தகவலை வெளியிடும் படக்குழு..!
* கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!
* வாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)
* ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!
* வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!
* விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!
* 12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!