(Another tragedy Two year old child killed accident)
பதுளை முதுமால கிளை வீதி மேல் பிரிவு பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று தேயிலை கொழுந்து ஏற்றிச்செல்லும் ரக்டரில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குழந்தையின் தாயார் தேயிலை கொழுந்து சேகரிக்கும் ரக்டருக்கு தேயிலை கொழுந்து வழங்குவதற்காக குழந்தையை வீட்டில் தனிமையில் விட்டுச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து தாயார் தனது வீட்டிற்கு வந்த போது, அங்கு குழந்தை இல்லாமையினால் குழந்தையைத் தேடியுள்ளார். இதன்போது வீதியில் இரத்த வெள்ளத்தில் குழந்தை உணர்வற்று வீழ்ந்து கிடந்தது.
இந்தச் சம்பவத்தை கண்ட தாயார் கூக்குரலிட்டு, அயலவர்களை வரவழைத்து, உடனடியாக குழந்தையை கஹடருப்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், குறித்த ரக்டரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/11/5-old-girl-died-vavuniya-cheddikulam/
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- இலங்கையில் அதிர்ச்சி; மூன்றரை வயது குழந்தையை சீரழித்த முதியவர்
- பாடசாலை மாணவி காதலனுடன் தப்பியோட்டம்
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Another tragedy Two year old child killed accident