இன்று அல்லது நாளை பிரதமர் பதவி விலகல் அறிவிப்பு?

0
683

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் முன்வைக்க கூடிய கோரிக்கைகள் தொடர்பிலே பிரதமர் அவதானம் செலுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் படி பதவி விலகுவதற்கு அவர் இணக்கம் தெரிவித்த போதும் அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஸ்ர உறுப்பினர்கள் இந்த நேரத்திலே பதவி விலக வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.