புதுமுக இயக்குனரான ராஜு விஸ்வநாத் இயக்கத்தில், ”லிசா” என்ற திகில் படத்தில் அஞ்சலி நடித்து வருகிறார். இப் படப்பிடிப்பின்போது நடிகை அஞ்சலி வீசிய தோசைக்கல் டைரக்டரின் நெற்றியை பதம் பார்த்துள்ளது.Anjali Attacked Director Lisaa shooting spot
லிசா படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த மதுரை வீரன் படத்தின் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார்.
இப் படத்தில், இந்தி பட உலகின் பிரபல நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே, மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ”லிசா” ஒரு திகில் படம். ”3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்” என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்காக, ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அஞ்சலி, ஒரு தோசைக்கல்லை தூக்கி கேமரா முன்பு வீச வேண்டும். ஆக்ஷன் என்று டைரக்டர் சொன்னதும், அஞ்சலி வீசிய தோசைக்கல் எதிர்பாராதவிதமாக பறந்து வந்து கேமரா அருகில் நின்ற டைரக்டரின் நெற்றியை தாக்கியது. அதில், அவருடைய கண் புருவம் கிழிந்து ரத்தம் கொட்டியது.
வலியை பொருட்படுத்தாத டைரக்டர், அந்த காட்சி எப்படி வந்திருக்கிறது? என்பதை டி.வி.யில் பார்த்தார். எதிர்பார்த்ததை விட பிரம்மாதமாக வந்திருப்பதை பார்த்து சந்தோஷப்பட்ட டைரக்டர், அதன் பிறகே மருத்துவமனைக்கு புறப்பட்டார். அதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
<MOST RELATED CINEMA NEWS>>
* கொஞ்சமும் கூச்சமில்லாமல் இலியானா செய்த செயல் : திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுப்பு..!
* பாலிவுட் செல்லும் நடிகை அமலாபால்..!
* மீண்டும் திரையில் இணையும் ஜஸ்வர்யா – அபிஷேக் ஜோடி : உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
* தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!
* பாலியல் சர்ச்சை கருத்தால் மோதிக்கொண்ட இரு நடிகைகள்..!
* திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!
* ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!
* பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!