ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்து சென்று 4 ஆண்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Andra Pradesh Woman Abused Tamil News
ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர். நகரில் வசிக்கும் 28 வயதான இளம் பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் அராஜ் கிரண் என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி குண்டூருக்கு அழைத்துச் சென்று உள்ளார். நெருங்கிய நண்பரான அவர் அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கே தன் நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்த நிலையில் தன்னை 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் ஆந்திர போலீசில் புகார் அளித்துள்ளார். பாலியல் பலாத்காரத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோ அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில் இந்த பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்துள்ளது. அந்த பெண் அப்போது இதை போலீசில் புகாராக அளிக்காமல் விட்டுவிட்டார். ஆனால், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட ஆபாச போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளதால் தற்போது புகார் அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐதராபாத் மேற்குப் பகுதி துணை போலிஸ் கமிஷனர் ஏ.ஆர்.சீனிவாஸ் கூறுகையில், “அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் போது எடுக்கப்பட்ட ஆபாச போட்டோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணுக்கு தெரிந்த ராஜ் கிரண் என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் பொய் கூறி குண்டூரில் ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த பெண் மயக்கமடைந்துள்ளார்.
பின்னர், அந்த பெண் மயக்கம் தெளிந்து பார்த்தபோது அவரை ராஜ் கிரண் உள்ளிட்ட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்வதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், அவர்களிடமிருந்து தப்பிய அவர் பலாத்காரம் சம்பவத்தை வெளியில் சொல்ல பயந்துகொண்டு போலீஸில் புகார் அளிப்பதை தவிர்த்துள்ளார். ஆனால், அவருடைய போட்டோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், கூட்டு பாலியல் பலாத்காரம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குண்டூரில் நடைபெற்றது என்பதால் குண்டூர் போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Andra Pradesh Woman Abused Tamil News