கனடாவில் 87 வயதான கூடைப்பந்தாட்ட வீரர்

0
136

கனடாவின் நியூபிவுன்ஸ்விக் சக்வில் பகுதியில் 87 வயதான முதியவர் ஒருவர் கூடைப்பந்தாட்ட விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

வெயன் மெக்கே என்ற 87 வயதான முதியவரே இவ்வாறு தனது திறகைமளை வெளிப்படுத்தி வருகின்றார். மெக்கே முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் என்பதுடன் அவர் ஓர் பயிற்றுவிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்கே பந்தை சரியான முறையில் கூடையில் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. மவுன்ட் எலிசொன் பல்கலைக்கழகத்தின் சார்பில் மெக்கே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் அதே கல்லூரி மைதானத்தில் இளையவர்களுடன் அவர் கூடைப்பந்தாட்ட போட்டியொன்றில் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.