பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக நண்பர்களான இளைஞர், யுவதிகள் சிலர் அம்பலாங்கொட பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நிர்வாண விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது. Ambalangoda Facebook Friends Party Issue 19 Arrested
பேஸ்புக் ஊடாக அறிந்து கொண்ட இளைஞர், யுவதிகள் சிலர் அம்பலாங்கொட, ஆதாதொல ஹோட்டலுக்குள் இந்த விருந்தை நடத்தியுள்ளனர்.
இரவு ஆரம்பித்த விருந்து அதிகாலை வரை இடம்பெற்றுள்ளது. இங்கு போதைப்பொருள் பாவனை உட்பட பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருந்தில் கலந்து கொண்ட யுவதிகள் பலர் நிர்வாண நடனத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் பல யுவதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விருந்து தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் இரவு முதல் அதிகாலை வரை ஹோட்டலுக்கு வெளியே நின்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்த விருந்தில் கிட்டத்தட்ட 250 இளைஞர், யுதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விருந்தில் கலந்து கொள்வதற்கு 2000 ரூபாய் டிக்கட் பெற்றுக் கொள்ள வேண்டும் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விடயம் அறிந்து ஹோட்டலை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கு போதைப்பொருள் மற்றும் கஞ்சா பயன்படுத்திய இளைஞர், யுவதிகள் 19 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 பேர் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 9 பேருக்கு 4500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வருட இறுதிக்குள் சென்னை இ திருச்சியிலிருந்து பலாலிக்கு விமான சேவை!
- ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் உள்ளனர்?
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு