விவசாய அமைச்சு கட்டிடத்துக்கு 960 மில்லியன்? : மாற்றவேண்டும் என கோரிக்கை

0
523
Agriculture ministry relocate news Tamil

ராஜகிரியவில் உள்ள விவசாய அமைச்சின் இருப்பிடத்தை மீண்டும் பத்தரமுல்லை – ரஜமாவத்த வீதியில் உள்ள கொவிஜன மந்திரயவுக்கு மாற்றுவதற்கான அமைச்சரவை அனுமதியை விவசாய அமைச்சு கோரியுள்ளது.

தற்போது ராஜகிரியவில் உள்ள விவசாய அமைச்சின் கட்டிடத் தொகுதிக்கு அதிகளவான பணம் விரயமாகுவதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டிலிருந்து, ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், விவசாய அமைச்சு ராஜகிரியிவில் இயங்கி வருகின்றது.

இந்த கட்டிடத்தின் முதல் மூன்று வருடங்களுக்கான செலவீனமாக அரசாங்கம் 504 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. எனினும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு வாடகை வரி 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதனை கணக்கிடும் போது 5 வருட நிறைவில் அரசாங்கம் குறித்த கட்டிடத்துக்கு மொத்தமாக 960 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும்.

எனினும் இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அமைச்சுக்கு இவ்வளவு ஆடம்பரமான கட்டிடம் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து, கட்டிடத்தை மீண்டும் பத்தரமுல்லைக்கு மாற்றுவதற்கான அமைச்சரவை அனுமதியையும் கோரியுள்ளார்.

எனினும் விவசாய அமைச்சை மாற்றுவதற்கான அமைச்சரவை அனுமதியை சபாநாயகரால் தனிப்பட்ட முறையில் வழங்க முடியாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Agriculture ministry relocate news Tamil,Agriculture ministry relocate news Tamil,Agriculture ministry relocate news Tamil