விக்னேஸ்வரன், சுமந்திரன் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

0
105

தமிழ் மக்கள் கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு கட்சிகளின் இணக்கப்பாடு தொடர்பிலான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளனர்.