ஆர்யாவின் உண்மை முகத்தை போட்டுடைத்த சங்கீதா. அப்போ எல்லாமே நாடகமா?

7
4549
Actress Sangeetha Open Talk Aarya Enga Veedu Mappilai

(Actress Sangeetha Open Talk Aarya Enga Veedu Mappilai)

நடந்து முடிந்த எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியின் முடிவு சற்றும் எதிர் பார்க்காமல் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருந்தது. ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலத்தை ஒரு தனியார் தொலைக்காட்சி ஆரம்பித்து 16 பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.

போட்டியின் இறுதியில் மூவர் எஞ்சி இருக்க, இறுதியில் ஒருவரை தேர்வு செய்து மணப்பார் என்றே அனைவரும் எண்ணி இருந்தனர். அனால் ஆர்யா யாரையும் புண் படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் யாரையும் தெரிவு செய்யாததால் ஆர்யா மீது மட்டும் அன்றி நிகழ்ச்சியை நடத்திய சனல் மீதும் மக்கள் செம கடுப்பில் இருந்தனர்.

இந்நிலையில், தற்போது நிகழ்ச்சி முடிந்து சில நாட்கள் கழித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா ஒரு சனல் நேர்காணலுக்கு சென்று கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் போது என்னிடம் கூறியவை அனைத்தும் உண்மையாகவே நடந்து முடிந்திருக்கின்றன. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது, இது ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் ஒரு ஷோ.

இதில் இறுதியில் தேர்வு செய்யும் பெண்ணை ஆர்யா மனதார திருமணம் செய்வார். இது ஒரு பொழுது போக்குக்காக மட்டும் நடத்தப்போவதில்லை. என்று கூறித்தான் என்னை நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிவித்தார்கள்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நிகழ்ச்சியில் பெண்களை வெளியேற்றும் போது எங்களுக்கு பெரிதாக ஒரு வலி தெரியவில்லை. சிறு நேரம் மட்டுமே அவர்களின் முகத்தில் கவலை இருக்கும். நாம் ஆறுதல் தெரிவித்ததும் அவர்கள் இதை மறந்து தமது வாழக்கையை நோக்கி சென்று விடுவார்கள்.

ஆனால் எமக்கு வலியை உணரவைத்தது அபர்ணதியின் வெளியேற்றத்தின் போது. அவளை சமாதானப்படுத்த முடியவில்லை. அவளின் அழுகை, ஆர்யா மேல் வைத்த காதல், அவளின் உண்மையான பேச்சு, வெளிப்படையான பேச்சுக்கு எம்மால் பதில் அளிக்க முடியாமல் போனது. இச்சம்பவத்தின் பின்னர் ஆர்யாவும் உணரத்தொடங்கினார்.

மேலும், இதில் ஐந்து போட்டியாளர்களது வீட்டுக்கும் விஜயம் செய்து அவர்களின் குடும்பத்தோடும் நெருங்கிப்பழகிவிட்டார். இதனால் இவரின் மனதையும் புண்படுத்த ஆர்யா நினைக்கவில்லை.

ஒரு பெண்ணை தேர்வு செய்வதன் மூலம் மற்றைய இரு குடும்பங்களையும் கவலை அளிக்க விருப்பம் இல்லாமல் அவர் அந்த முடிவை அறிவித்திருக்கிறார். உடனே அந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும், கொஞ்சம் நிதானித்து யோசித்தால் அவரின் முடிவு சரி என்றே தோன்றவைக்கிறது.

எது எப்படியோ, அது ஆர்யாவின் வாழ்க்கை. அவரின் முடிவை நாம் எப்படி முடிவு செய்ய ஏலும். என்று சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.

Tag: Actress Sangeetha Open Talk Aarya Enga Veedu Mappilai