கடந்த ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்த போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படக்குழுவினர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியதை நடிகர் கருணாகரன் டிவிட்டரில் விமர்சித்திருந்தார்.Actor Karunakaran demanding political talk actor Vijay
இதற்கு விஜயின் ரசிகர்கள் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் அவரை தகாத வார்த்தைகளால் வசைபாடியும் அவர் முகம் பொருந்திய பல மீம்ஸ்களை உருவாக்கியும் அவரை கேலி செய்தனர்.
இதைத்தொடர்ந்து சர்கார் இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், நிஜத்தில் தான் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என்று குட்டிக் கதை கூறினார்.
அப்போது, “தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும். ஒருமன்னன் சரியாக இருந்தால் கீழே இருக்கும் அனைவரும் சரியாக இருப்பார்கள் ” என்று கூறினார்.
விஜய்யின் குட்டிக்கதை மற்றும் அவரது கருத்தை விமர்சித்த கருணாகரன், “குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்” என விஜய்யை மறைமுகமாக சாடினார் .
இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் கோபத்தில் தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்தனர். ரசிகர்களின் கோபத்துக்கு பதிலளித்த கருணாகரன், “”தம்பி எங்க அப்பா இந்த நாட்டுக்காக ’ரா’(RAW) அதிகாரியாக என்ன எல்லாம் செய்தார் என்று உனக்கு தகவலுக்காக சொல்கிறேன்.
உன்னைப் போன்ற ஃபேக் ஐடியில் வந்து தகாத வார்த்தைகளால் பேசுவதால் தான் விஜய் சாரை வெறுக்கிறேன்” என்று கோபத்துடன் தெரிவித்தார் கருணாகரன்.
ஆனாலும் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவரைத் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதால், “எனது அடுத்த கேள்வி எனது தாய் மொழியில் இருக்கும். ரெடியா சர்கார் அடிமைகளா?” என்று கூறியுள்ளார்.
மேலும் தனது அடுத்த பதிவில், “நீங்கள் தமிழ்நாட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் உங்களது ரசிகர்களை சுத்தப்படுத்த வேண்டும் என்று நடிகர் கருணாகரன் நடிகர் விஜய்-க்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து! – 20 பேர் பலி!
- வேறு சாதியைச் சேர்ந்தவரோடு ஓடிப் போனதாக சிறுமியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்!
- காற்றுக்காக கதவை திறந்துவைத்த வேளையில் ஒரு மாத குழந்தை திருட்டு! – வேளச்சேரியில் பரபரப்பு!
- சிறுமிக்கு பூச்சி மருந்து கொடுத்து கொல்ல செய்த கொடூர தந்தை!
- தமிழகம், கேரளா, இலட்சத்தீவு பகுதிகளில் தொடர்ந்தும் கன மழைக்கு வாய்ப்பு
- இரசாயன தாக்குதல்; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்