சனிக்கிழமை Pont-de-l’Arche (Eure) பிராந்தியத்தை ஊடறுக்கும் A13 நெடுஞ்சாலையில், தீப்பற்றிய பேருந்தில் இருந்து சாரதியின் துரித நடவடிக்கையினால் 41 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. A13 highway France, suddenly fire broke 41 passengers
நெடுஞ்சாலையில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தின் பின் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பேருந்தின் முன் பகுதியில் சமிக்ஞை விளக்கு எச்சரிக்கை ஒலி எழுப்ப, சாரதி பக்கத்து கண்ணாடி வழியே பேருந்தின் பின் பகுதியினை பார்த்துள்ளார்.
பேருந்தின் பின் பகுதியில் இருந்து புகை வெளியே வர, சாரதி துரிதமாக செயற்பட்டார். உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு, எவ்வித பதட்டமுமின்றி, அனைத்து பயணிகளையும் வெளியே வரச்செல்லி அழைத்தார்.
பேருந்துக்குள் எவ்வித பதட்டமான சூழ்நிலையும் ஏற்படாமல், இரண்டு சிறுவர்கள் 17 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தமாக 41 பேர் பேருந்தை விட்டு இறங்கினர். உடனடியாக பேருந்து மிக வேகமாக எரிந்துள்ளது.
அங்கிருந்த பயணிகள் அனைவரும் எவ்வித காயங்களும் இன்றி காப்பாற்றப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயிணை அணைத்தனர்.
அதன் பின்னர் சாரதியின் துரித நடவடிக்கையால் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளமையை குறிப்பிட்டு பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
tags :- A13 highway France, suddenly fire broke 41 passengers
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸில் பாலியல் நோய்கள் அதிகரிப்பு- இளைஞர்களே அவதானம்!
- Toronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை!
- ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.