(Gender discrimination china company advisement latest gossip )
பொருளாதரத்தில் எப்பொழுதும் முன்னணயில் நிற்கும் சீனா பாலின பாகுபாட்டில் எப்பொழுதும் பின் தங்கியே இருகின்றது .
மனித உரிமைகள் ஆணையம் ஆராய்ந்து கணித்த கணிப்பின் படி சீன அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆண்கள் பெண்கள் இடையில் பாலின பாகுபாட்டினை வளர்த்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. “ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்” என்று சில தனியார் நிறுவன விளம்பரங்கள் செய்து வருகின்றது.
சீனாவின் மிகப் பெரிய நிறுவனமான அலிபாபா “அழகான பெண்கள் இணை ஊழியராகத் தேவை” என்று விளம்பரம் செய்ததாகவும் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

சில வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் பெண்கள் உடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும், உயரம், எடை, குரல் அல்லது முகம் போன்றவையும் அந்த வேலைக்குத் தேவையில்லாததை எல்லாம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் மிகப் பெரிய தேடு பொறி நிறுவனமான ‘பெய்டு’வெளியிட்ட அறிவிப்பில் உள்ளடக்கத் திறனாய்வாளர்கள் பணிக்கு ஆண்கள் தேவை என்றும், வேலைப் பழுவையும் சமாளித்து விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களிலும் வேலை செய்வதற்கு ஏற்ற ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று அறிவித்து இருந்தது.

அதிலும் சில விளம்பரங்கள் ஆண் வாடிக்கையாளர்கள் ஈர்க்க ஏற்ற உடல் அமைப்புடன் கூடிய பெண்கள் தேவை என்றெல்லாம் கூட வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் பாலின பாகுபாட்டை அடிப்படையாககொண்டு விளம்பரம் செய்வது குற்றம் என்றாலும் சீன அரசு இதனைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை எனவும் எப்போதாவது இருந்து இதற்கு சிலவேலைகளில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- மனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்!
- மஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..? இம்ரான் தாஹிர்!
- பிரிந்த காதலர்களின் அழகிய டுவீட்.. : அட இது ஸ்ருதி – மைக்கேல் காதல் தானுங்க..!!
- என்னையும் படுக்கைக்கு அழைத்தனர் : புலம்பித் தள்ளும் பிரபல நடிகை..!
- திருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்!
- நாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….
எமது ஏனைய தளங்கள்
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Ulagam.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Timetamil.com
- Tamilnews.com



