தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்பே… கனடாவில் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை!

0
227

தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தையின் அன்பின் முன்பே… தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பு தனித்துவமானது அதை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.

கனடாவில் தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவை சேர்ந்த ஸ்ருத்வா தேசாய் என்ற மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.

மகளுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த தந்தை

கனடாவில் வசிக்கும்  மகளை ஆச்சர்யப்படுத்துவதற்காக   மகளுக்குக்கு தெரிவிக்காது  ஸ்ருத்வா தேசாயின் தந்தை இந்தியாவில் இருந்து கனடா வரை பயணம் செய்துள்ளார்.

ஸ்ருத்வா தேசாய் வேலை பார்க்கும் கடைக்கு திடீரென அவரது தந்தை சென்றதும் ஆச்சரியத்தின் உச்சிக்கு சென்ற ஸ்ருத்வா தேசாய் தனது தந்தையை கட்டிப்பிடித்துக் கொண்டு ஆனந்த கண்ணீரில் மூழ்கிய  காணொளி வெளியை வெளியிட்டுள்ளார்.

அவரது காணொளியை கண்ட சமூகவலைத்தளவாசிகள்  பலரும் நெகிழ்ச்சியடைந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒருவர் இந்த காட்சி கண்களை ஈரமாக்குகிறது. எந்த தந்தையும் தன் மகளை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்று ஆசைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த வீடியோ 10.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், சுமார் 2 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது.