காலை எழுந்ததும் செய்யவே கூடாத 5 விஷயங்கள்!

0
327

அன்றாட வாழ்வில் தினமும் காலையில் நாம் புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும ்இருப்பதற்கு நாம் சில பழக்கங்களை காலையில் தவிர்க்க வேண்டும்.

காலையில் எழுந்ததும் தவிர்க்க வேண்டியது என்ன?

காலை எழும்பும் போது சிலர் படுக்கையில் இன்னும் சிறிது நேரத்தினை கழிக்க ஆசைப்படுவார்கள். அவ்வாறு மீண்டும் மீண்டும் உறங்க வேண்டும் என்ற செயல், உங்களுக்கு மந்தமான உணர்வினை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க வேண்டுமெனில் அலாரம் அடித்த உடனே எழுந்திருக்க முயற்சிக்கவும்.

பரபரப்பான சூழ்நிலையில் பலர் இன்று காலை உணவினை தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு காலை உணவை தவிர்ப்பது கவனம் குறைதல், ஆற்றல் நிலைகள் இவற்றினை கெடுக்கும். உங்களது உடலையும் மனதையும் சீராக வைக்க வேண்டும் என்றால் காலை உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ளவும்.

காலை எழுந்ததும் செய்யவே கூடாத 5 விஷயங்கள்! என்னென்னனு தெரியுமா? | Morning Wakeup After 5 Habits Avoid

சிலர் காலையில் கண்விழிப்பதே தொலைபேசியில் தான் இருக்கும். ஆம் இவ்வாறு காலை எழுந்ததும் தொலைபேசியில் நேரத்தினை செலவிடுவது, உங்களது அனைத்து செயல்களிலும் திசை திருப்பவும் செய்கின்றது. இதற்கு பதிலாக தியானம், படித்தல், இலக்குகளைப் பற்றி சிந்திப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனதை புத்துணர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்.

தினமும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, சில உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சியினை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இதனால் நாள்முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.

காலை பொழுதை அவசரமாக தொடங்க வேண்டாம். இவ்வாறு செய்வதால் மனஅழுத்தம் அதிகரிப்பதுடன், குழப்பமான உணர்வினையும் ஏற்படுகின்றது. ஆதலால் நீங்கள் செய்யும் வேலைகளுக்கு சரியான நேரத்தை ஒதுக்கி அவசரத்தை தவிர்க்கவும்.