கருணாநிதி அழைத்தால் மீண்டும் தி.மு.க.வில் இணைவேன்: மு.க.அழகிரி

0
914
Former Union Minister MK Araghiari said Karunanidhi calls join DMK again.

(Former Union Minister MK Araghiari said Karunanidhi calls join DMK again.)

தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தி.மு.க.வில் இணைவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கியிருக்கும் அழகிரிஇ தனது சகோதரரான தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் ஓய்வெடுத்து வரும் தி.மு.க. தலைவரும் தனது தந்தையுமான கருணாநிதியை நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் அழகிரி சந்தித்துள்ளார்.

சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ‘‘எனது தாய், தந்தையை சந்திப்பதற்காக சென்னை சென்றேன. கருணாநிதி நலத்துடன் இருக்கிறார். அவர் அழைத்தால் மீண்டும் தி.மு.கவில் இணைந்து பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2019இல் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்திய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள், விசிக, முஸ்லிம் லீக் உட்பட 8 கட்சிகளை ஒருங்கிணைத்து மு.க.ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இந்தச் சூழலில் கருணாநிதி அழைத்தால் தி.மு.க.வில் இணைவேன் என அழகிரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அழகிரியின் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, ‘‘கடந்த 4 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் அழகிரிஇ அரசியலில் இறங்குவதற்கான நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான காய்நகர்த்தல்கள் தொடங்கி விடும். எனவே, தி.மு.க.வில் இணைவதற்கான முயற்சியில் அழகிரி ஈடுபட்டிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளனர்.

(Former Union Minister MK Araghiari said Karunanidhi calls join DMK again.)