428 கோடி நில ஊழல்: தெங்கு அட்னான் மீது விசாரணை செய்யுமாறு கோரிக்கை..?

0
788
428 crore land scam , malaysia tamil news, malaysia, malaysia news, land scam,

{ 428 crore land scam }

மலேசியா: கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 64 துண்டு நிலங்கள் விற்பனை செய்யபட்டதில் ஊழல் நடந்திருப்பது தொடர்பில் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ அட்னானுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு (எம்.ஏ.சி.சி) ஆணையம் விசாரணை நடத்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எம்.ஏ.சி.சி.யில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கூட்டரசு பிரதேச அறவாரியம் என்ற அமைப்புக்கு இந்த நிலங்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த அறவாரியத்தின் தலைவராக தெங்கு அட்னான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் முதல் நபராக விசாரிக்கப்பட வேண்டியவர் தெங்கு அட்னான் தான். இந்த நிலங்களை விற்பனை செய்ய அனுமதி அளித்தவரே அட்னான் தான் என்று கெப்போங் தொகுதி எம்.பி.யான லிம் லிப் எங் கூறியுள்ளார்.

அதேவேளையில், நிலத்தை வாங்கிய அறவாரியம் அட்னான் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. இந்த 64 துண்டு நிலங்களின் மொத்த மதிப்பு 428 கோடி ரிங்கிட் ஆகும். டெண்டர்கள் எதுவுமின்றியே விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று எம்.பி.யான லிம் லிப் எங் மேலும் கூறியுள்ளார்.

வாங்கும் சக்தி கொண்ட வீடுகளை மக்களுக்காக கட்டித் தருவதற்கு உரிய நிலங்கள் இவை என்று கூறப்பட்டாலும், இவற்றில் மிகச்சிறிய பகுதியே அந்தத் திட்டத்தில் சம்பந்தப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது என்றார் அவர்.

Tags: 428 crore land scam

<< RELATED MALAYSIA NEWS>>

*சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதே எமது நிர்வாகத்தின் முதல் பணி..! அஸ்மின் அலி

*பினாங்கு ஆட்சிக் குழுவிலுள்ள 11 பேர் முக்கியமான பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர்..!

*ஜொகூர் ஆட்சிக் குழுவில் 10 பேர் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளனர்..!

*மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!

*முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!

*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!

*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!

*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!

<<Tamil News Groups Websites>>