மெலானியா டிரம்ப்புக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை!

0
602
Melania Trump Surgery

Melania Trump Surgery

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது சிறுநீரகத்தில் சிறிய கட்டி இருந்ததாக நம்பப்படுகிறது.

சிகிச்சை எந்தவிதச் சிக்கலுமின்றி வெற்றிகரமாக முடிந்ததாக டிரம்ப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கட்டிக்கு ரத்தம் செல்வதைத் தடுப்பதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ நிலையத்தில் மேலும் ஒருவாரம் டிரம்ப் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரைக் காணச் செல்வதாக அதிபர் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.