டி20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது.

131 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.