US ready Helping North Korea
வடகொரியா அதன் அணுவாயுதங்களைக் கைவிடும் உத்தியோகபூர்வ முடிவை எடுத்தால், அமெரிக்கா அதற்கு உதவ தயாராக உள்ளதாய் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார்.
வடகொரியாவிற்கு பாதுகாப்பு உத்திரவாதத்தையும் முதலீடுகளையும் அமெரிக்கா வழங்கும் என்றார் அவர்.
எரிசக்தி, உட்கட்டமைப்பு,தொழில்நுட்பம், வேளாண்மை ஆகியவற்றில் அமெரிக்கா முதலீடுகளை வழங்கும் என்று போம்பேயோ தெரிவித்துள்ளார்.
வடகொரியா இம்மாத இறுதியில் அதன் அணுவாயுதச் சோதனைத் தளத்தைத் தகர்க்கும் என்று தெரிவித்துள்ளது.