உயிரைப் பணயம் வைத்து தாயகம் திரும்பும் ஈழத் தமிழர்கள்

0
1064
Eelam Tamils return Homeland from India

(Eelam Tamils return Homeland from India)
தமிழ் நாட்டில் முகாம்களில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலர் உயிரைப் பணயம் வைத்து கடல்வழியாக தாயகத்திற்கு திரும்பி வருவதான அதிர்ச்சித் தகவலை பிபிசி செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக ஈழத் தமிழர்கள் சட்டவிரோதமாக கடல்வழியாக தாயகம் திரும்பி வருகின்றனர்.

1983 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகிய போது, தமது உயிருக்கு அஞ்சி தமிழகத்திற்கு இலங்கைத் தமிழர்கள் பலர் அகதிகளாகச் சென்று குடியேறினர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக இலங்கை அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்து தற்பொழுது 09 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் தமிழ்நாடு இராமேஸ்வரத்திற்கு ஈழத் தமிழர்கள் படகு மூலம் சென்றுகொண்டே உள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் 119 அகதிகள் இடைத்தங்கல் முகாம்களில் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் ஈழ அகதிகள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பொலிஸ் நிலையங்களில் அகதிகளாகப் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர்.

இதேவேளை, இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தற்போது 539 குடும்பங்களில் 680 ஆண்களும், 704 பெண்களும், 183 ஆண் குழந்தைகளும் 193 பெண் குழந்தைகளுமாக மொத்தம் ஆயிரத்து 760 ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் கடந்த மாதம் 4 குடும்பங்களில் ஆண்கள் 12 பேர், பெண்கள் 5 பேர், ஆண் குழந்தை 5 பேர், பெண் குழந்தை 1 உட்பட 23 பேர் தாயகத்திற்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதி கோரியுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக ஈழ அகதிகள் சட்விரோதமாகவும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடனும் தாயகம் திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அனுமதி பெறாமல் படகு மூலம் சட்ட விரோதமாகவே அதிகமானோர் இலங்கைக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழக முகாமில் இருந்து ஏன் தாயகம் திரும்புகின்றனர் என மண்டபம் அகதி முகாமிலுள்ளவர்களிடம் கேட்ட போது, வழக்கு உள்ளவர்களால் அரசின் அனுமதியுடன் இலங்கை செல்ல முடியாது, அப்படிப்பட்ட சிலர் எங்கள் முகாமில் இருந்து சட்டவிரோதமாக சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தாங்கள் இலங்கைக்கு செல்ல அரசிடம் அனுமதி கேட்டு பதிந்தால் கூட, அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக நடந்து கொள்வதால் பலர் சட்டவிரோதமாக செல்வதாகவும் கூறியுள்ளனர்.

நாங்கள் உயிரை காப்பற்றி கொள்ள இந்தியா வந்த போது ஆவணங்கள் எல்லாம் கடலில் போய்விட்டது. தற்போது மீண்டும் இலங்கைக்கு செல்ல கடவுச்சீட்டு பெற முடியவில்லை. அரசு நாங்கள் வந்த போது ‘அகதி’ என பதிந்த ஆவணத்தை வைத்து கடவுச்சீட்டு வழங்கினால், நாங்கள் கள்ளத்தோணியில் இலங்கை செல்ல தேவை இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், தங்களில் நிறையப் பேருக்கு இலங்கை செல்ல விருப்பம் இல்லை என்றும் இந்தியாவில் இருக்கதான் விரும்புவதாகவும் எனினும் இந்திய அரசு தங்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மறுப்பதால், எத்தனை ஆண்டுகள் முகாமில் இருந்தாலும் அகதியாகதான் இருக்க வேண்டும் என்பதால் நாட்டுக்கு திரும்ப செல்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Eelam Tamils return Homeland from India