{ Najib relative home police check }
மலேசியா: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பின் உறவினர் ஒருவர் தங்கி இருந்ததாக நம்பப்படும் ஆடரம்பர அடுக்கு மாடி வீட்டில் நேற்று போலீசார் திடீரென அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
முக்கிய சில ஆவணங்கள் இங்கு பதுக்கி வைக்கப் பட்டிருக்கக்கூடும் என்று கருதப்பட்டதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த ஆவணங்கள் மலேசியாவில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்படலாம் என்று நம்பப்படுகின்றது.
நஜிப்பின் துணைவியார் ரோஸ்மாவுக்காக அந்த அடுக்கு மாடி வீட்டில் சில பெட்டிகள், கைப் பைகளில் வைக்கப்பட்டு வழங்கப் பட்டுள்ளதாகவும் அந்தப் பெட்டிகளில் ஆவணங்களும் சில முக்கிய பொருள்களும் இருப்பதாகவும் அவை அரசாங்க வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப் பட்டதாகவும் தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
கோலாலம்பூரிலுள்ள பெவிலியன் ரெஸிடெண்ட் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் சுமார் 20 க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது .
அரசாங்கத்திற்குச் சொந்தமான சில முக்கிய ஆவணங்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.
Tags: Najib relative home police check
<< RELATED MALAYSIA NEWS>>
*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!
*ஜிஎஸ்டி நீக்கம் தொடர்பில் மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்..!
*பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!
*அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக நஜிப் ரசாக்குக்கு வேண்டுகோள்!
*சிலரது ‘தலைகள்’ உருளும்: மகாதீர் அறிவிப்பு..!
*அரசியலை விட்டு விலகுகின்றார் டத்தோஶ்ரீ சுப்ரா..!
*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!
<<Tamil News Groups Websites>>