(16 slfp members join mahinda rajapaksa)
அமைச்சு பதவியில் இருந்து விலகிய தான் உள்ளிட்ட குழு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தின் கீழ் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக டபிள்யூ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேறு கட்சியுடன் இணையவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மகிந்த அமரவீர,
ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது வேறு எந்த அணியுடனோ இணைந்து அடுத்த ஆட்சியை அமைக்கப் போவதில்லை. மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமே அமைக்கப்படும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றிகொண்ட தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே ஜனநாயக ஆட்சியினை முன்னெடுத்து செல்ல முடியும்.
தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் வேறு எந்தக் கட்சியுடனும் இணைந்து செயற்படப் போவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்தே தீர்மானங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் எமக்கு உறுதியளித்துள்ளனர்.
நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் இத்தனை காலமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றோம். ஒரே கொள்கையில் இத்தனை காலமாக செயற்பட்ட காரணத்தினால் தான் மக்கள் எம்மை ஆதரித்து வருகின்றனர்.
ஆகவே இனியும் அரசியல் இலாபங்களுக்காக நாம் கட்சி மாற வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்படப்போவதில்லை. நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவும் மாட்டோம் அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணையவும் மாட்டோம். நாம் இறுதி வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகவே செயற்படுவோம் என்றார்.
More Tamil News
- இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்
- இலங்கையில் அதிர்ச்சி; மூன்றரை வயது குழந்தையை சீரழித்த முதியவர்
- பாடசாலை மாணவி காதலனுடன் தப்பியோட்டம்
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- மற்றுமொரு சோகம்; இரத்த வெள்ளத்தில் இரண்டு வயது குழந்தை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags:16 slfp members join mahinda rajapaksa,16 slfp members join mahinda rajapaksa