கனடாவின் பிரபல ராப் இசைக் கலைஞரான பெட்ரிக் வெய்ன் கத்தி குத்துச் சம்பவமொன்றில் உயிரிழந்துள்ளார். ஹாலிபிக்ஸின் வோட்டர் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் வைத்து இசைக் கலைஞர் வெய்ன் மீது கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்ற பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
கத்தி குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இருந்தவரை மீட்டு பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிவித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி இசைக்கலைஞர் வெய்ன் உயிரிழந்துள்ளார்.

நடனமாடிக் கொண்டிருந்த பகுதியில் திடீரென கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒருவர் காயமடைந்து வீழ்ந்தார் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
