வலம்புரியை தம்புள்ளை வர்த்தகருக்கு விற்பனை செய்ய முயற்சித்த இளைஞர்கள்

0
496
Cotton conch business rich trader two young age arrest police

Cotton conch business rich trader two young age arrest police
வலம்புரி சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.

வலம்புரி ஒன்றை விற்பனை செய்வதற்காக கிளிநொச்சியிலிருந்து தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையிலேயே வவுனியாஇ நொச்சிமொட்டை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ் மோசடி தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கார் ஒன்றில் வலம்புரியை கொண்டு செல்லும் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது மற்றும் 21 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலம்புரியை ஒன்றரை கோடி ரூபாவுக்கு தம்புள்ளை பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு செல்லும் போதே 24 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Cotton conch business rich trader two young age arrest police

More Tamil News

Tamil News Group websites :