கோரிக்கைக்கு இணங்காவிட்டால் போராட்டத்தினை பலப்படுத்துவோம்

0
448
government service management warning protest latest news

public health inspectors picketing post men union latest news
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான பணிபுறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக பொத சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொத சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இம்மாதம் 14ம் திகதி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை மேலும் பலப்படுத்துவதாக அந்த சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய கூறினார்.

இதேவேளை தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
public health inspectors picketing post men union latest news

More Tamil News

Tamil News Group websites :