1எம்.டி.பி. அறிக்கை மீதான ஓ.எஸ்.ஏ. சட்டம் நீக்கம்: துன் மகாதீர்!

0
642
1emtipi OSA report Law Removal, malaysi tamil news, mahathir, malaysia 14 election, malaysia election,

{ 1emtipi OSA report Law Removal }

மலேசியா: பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 1எம்.டி.பி. நிறுவனத்தின் கணக்கறிக்கையை அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் (ஓ.எஸ்.ஏ) வைக்கக்கூடாது என போலீஸூக்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் அந்நிறுவனத்தின் அறிக்கையை எனக்கு அனுப்பி வைப்பார்கள். அதை நான் ஆய்வு செய்வேன் என இன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சாத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

1எம்.டி.பி. கணக்கறிக்கையை தேசிய பொது கணக்காய்வு செயற்குழு கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்தது. ஆயினும், தலைமை கணக்காய்வாளர் டான்ஸ்ரீ அம்ரின் புவாங் அந்த அறிக்கையை ஓ.எஸ்.ஏ. சட்டத்தின் கீழ் வகைப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கை நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்படவில்லை. இருப்பினும் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அந்த அறிக்கையின் நகலை சரவாக் ரிப்போர்ட் இணையத்தள செய்தி பதிவேடு வெளியிட்டு அம்பலப்படுத்தியது.

இதுவரையில், 1எம்.டி.பி. குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அது குறித்த சரியான விளக்கம் மலேசியர்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது, துன் மகாதீரின் நடவடிக்கையின் வாயிலாக இந்நிறுவன மோசடி குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Tags: 1emtipi OSA report Law Removal

<< RELATED MALAYSIA NEWS>>

*ஜிஎஸ்டி நீக்கம் தொடர்பில் மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்..!

*பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!

*அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக நஜிப் ரசாக்குக்கு வேண்டுகோள்!

*மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மதித்து நாட்டிலேயே இருக்கத் தயார்: முன்னாள் பிரதமர் நஜிப்!

*சிலரது ‘தலைகள்’ உருளும்: மகாதீர் அறிவிப்பு..!

*அரசியலை விட்டு விலகுகின்றார் டத்தோஶ்ரீ சுப்ரா..!

*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!

*மகாதீரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ..!

*துன் மகாதீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து..!

*கெடா மந்திரி புசாரக இன்று பதவி ஏற்கப்போவது யார்..?

*இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!

*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!

<<Tamil News Groups Websites>>