இலங்கை அணி 378 ஓட்டங்கள்!

0
830

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் அடிப்படையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தினேஸ் சந்திமால் அதிகபட்சமாக 80 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 51 ஓட்டங்களையும் மற்றும் ஓசத பெர்ணான்டோ 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் நஷீம் ஷா மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.